கைப்பந்து விளையாட முடியாத சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கைப்பந்து விளையாட முடியாத சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கிரேசி. 

சென்னை வியாசர்பாடியில் கைப்பந்து விளையாட முடியாத சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி என்பவரின் மகள் கிரேசி வயது 20. இவர் பிராட்வே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடது காலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கிரேசி கைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் உடையவர், தொடர்ந்து கைப்பந்து விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக காயத்தின் காரணத்தினால் கைப்பந்து விளையாட முடியாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று மாலை நான்கு மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து, வெளியே சென்றிருந்த அவரது அண்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தனது தங்கை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற எம்கேபி நகர் போலீசார் கிரீஸின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!