வியாசர்பாடியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் பெருவிழா

வியாசர்பாடியில்  500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் பெருவிழா
X

சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்டி சேகர், எபினேசர் உள்ளிட்டோர் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

வியாசர்பாடியில் அனைத்து கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.

வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையோட்டி பல்வேறு இடங்களிலும் கிறிஸ்துமஸ் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏஐசிசிசி அனைத்து கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு சார்பில் வியாசர்பாடியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.

இதில் பிஷப் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர் டி சேகர், ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எபினேசர் மற்றும் கிறிஸ்தவ பேராயர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வியாசர்பாடியில் பல்வேறு இடங்களுக்கு ஊர்வலமாகச் சென்று அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்டி சேகர் எபினேசர் உள்ளிட்டோர் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai solutions for small business