வியாசர்பாடியில் மத்திய அரசுக்கு எதிராக ரத யாத்திரை

வியாசர்பாடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ரத யாத்திரை நடைபெற்றது.
குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார். பாரதி. வஉசி மருது பாண்டியர்கள் ஆகியோரின் உருவங்கள் பதித்த வண்டியை குடியரசு தின விழாவில் மத்திய அரசு புறக்கணித்தது கடும் சர்ச்சையை கிளப்பியது இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
அந்தவகையில் குடியரசு தினமான இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் இருந்து இளைஞர்கள் குழந்தைகள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலுநாச்சியார் பாரதியார் வ உ சிதம்பரனார் மருது சகோதரர்கள் ஆகியோரின் முகங்களை அடங்கிய முக கவசங்களை தங்களது முகத்தில் பதித்து ஊர்வலமாகச் சென்றனர் மேலும் இதில் சிறுமி ஒருவர் வேலுநாச்சியார் வேடம் அணிந்து குதிரையில் ஊர்வலமாக வந்தார். மினி வேன் ஒன்றில் தலைவர்களின் புகைப்படங்களை வைத்து அதில் மாலை அணிவித்து ஊர்வலமாக வழிநடத்திச் சென்றனர்
வியாசர்பாடி பகுதியில் இருந்து முல்லை நகர் வழியாக எம்கேபி நகர் பேருந்து நிலையம் வரை இந்த ரத ஊர்வலம் முடிவடைந்தது தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த தியாகிகள் ரத ஊர்வலம் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu