வியாசர்பாடியில் ரூ.20 ஆயிரம் மதிப்பு செல்போன் பறிப்பு: ஒருவர் கைது

வியாசர்பாடியில் ரூ.20 ஆயிரம் மதிப்பு செல்போன் பறிப்பு: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சுமன்.

வியாசர்பாடியில் ஆட்டோவில் சவாரி ஏறுவது போல ஏறி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி சடகோபன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 43. இவர் சொந்தமாக இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார்.

கடந்த 28 ம் தேதி இரவு வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ட்ரலில் இருந்து ஆட்டோவில் ஏறி வந்து கொண்டிருந்தார். அப்போது வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது ஒரு மர்ம நபர் ஆட்டோவை மடக்கி வழியில் இறங்கி கொள்வதாக கூறி சவாரி ஏறுவது போல ஏறினார்.

ஆட்டோ சிறிது நேரம் சென்றதும் ராஜேந்திரன் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை எடுத்துக் கொண்டு அந்த நபர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினார். அவரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர் பகுதியைச் சேர்ந்த சுமன் வயது 22 என்ற நபரை கைது செய்தனர்.

இவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளது சுமன் மீது வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai and business intelligence