சென்னையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 கொள்ளையர்கள் கைது

சென்னையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 கொள்ளையர்கள் கைது
X

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவன்.

சென்னை வியாசர் பாடியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் தனியார் நிதி நிறுவன வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல பணி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வங்கியிலிருந்து அலாரம் அடிப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


தகவலின்பேரில் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் அப்போது முன்பக்கம் எந்தவித பூட்டும் உடைக்கப்படாமல் இருந்தது இதனையடுத்து பின்புறம் சென்று பார்த்தபோது வங்கியின் ஜன்னலை உடைத்து வெளியே இரண்டு நபர்கள் தப்பி ஓடுவது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களில் ஒருவரை போலீசார் துரத்திப் பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் நேபாளத்தைச் சேர்ந்த சாகர் பகதூர் வயது 30 என்பதும் வங்கியில் கொள்ளையடிக்க தனது நண்பருடன் வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


இதனையடுத்து அதே பகுதியில் பதுங்கியிருந்த தான் பகதூர் 40 என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அங்கு இவர்கள் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது .இவர்கள் இருவரும் வங்கியில் பின் பக்க ஜன்னலை உடைத்து உள்ளே செல்லும்போது அந்த வங்கியில் அலாரம் அடித்து உள்ளது. அதன் பின்பு வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் திருடியவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்களிடம் இருந்து செல்போன்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்