கொடுங்கையூரில் குடிபோதையில் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது

கொடுங்கையூரில் குடிபோதையில் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது
X

கைதானவர்கள்.

சென்னை அருகே, கொடுங்கையூரில் குடிபோதையில் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி நகர் 1வது தெரு பகுதியில், நேற்று இரவு ஒரு மணி அளவில், கொடுங்கையூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் அவர்களை எச்சரித்து வீட்டிற்கு செல்லும்படி கூறினர்.

அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேரும் கீழே இருந்த கல்லை எடுத்து போலீசாரின் வாகனம் மீது எரித்தனர். மேலும் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் போலீசாரை தாக்கியுளளனர். இதனால் போலீசார் அப்பகுதியில் இருந்து சென்று மீண்டும் சக போலீசாரை அழைத்துக் கொண்டு மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த மார்டின் வயது 24. கொடுங்கையூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் 27 மற்றும் வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் 14வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் ஆல்வின் 23 என்பது தெரியவந்தது கைது செய்யபட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!