தேர்தலை அமைதியாக நடத்த போலீசார் சார்பில் அனைத்து கட்சி கூட்டம்

தேர்தலை அமைதியாக நடத்த போலீசார் சார்பில் அனைத்து கட்சி கூட்டம்
X

புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் எம்கேபி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தலை அமைதியாக நடத்த புளியந்தோப்பு சரகத்தில் காவல்துறை சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள தேர்தலை அமைதியாக நடத்தவும், தேர்தலில் அதிகபடியான வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்

அந்த வகையில் தேர்தலை அமைதியாகவும் ஒரு கட்சியினருக்கும் மற்றொரு கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கை தவிர்க்கவும் போலீசார் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் எம்கேபி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பூர் கொளத்தூர் திருவிக நகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார்.

வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் கட்சிப் பிரதிநிதிகள் உதவி கமிஷனர்கள் இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!