கொடுங்கையூரில் 24 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

கொடுங்கையூரில் 24 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லா.

குட்கா பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி அதனை வட சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் இரண்டாவது பிளாக் பகுதியில் ஒரு வீட்டில் நேற்று மாலை சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்து 24 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்த ஷேக் அப்துல்லா (57) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் குட்கா பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி அதனை வட சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஷேக் அப்துல்லா மீது வழக்குபதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது