சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்
X

சென்னையில் 11 ஆண்டுகளுக்கு பின் கைதான ரவுடி பிரபு.

சென்னையில் வழிப்பறி வழக்கில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வழிப்பறி சம்பவம் ஒன்று நடந்தது. இதில் கொடுங்கையூர் மெட்ரோ வாட்டர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபு என்கின்ற வெள்ள பிரபு(36) ஈடுபட்டிருந்தார். இவர் மீது வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் பிரபு கொடுங்கையூர் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாறி சென்று விட்டார். இதனால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அதுமட்டுமின்றி வியாசர்பாடி பகுதியில் பிரபு மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் பிரபு மீண்டும் கொடுங்கையூர் பகுதிக்கு வருவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று கொடுங்கையூரில் உள்ள வீட்டில் இருக்கும்போது பிரவுவை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags

Next Story
ai marketing future