மக்களே விழிப்புணர்வு அவசியம்: பெருநகரங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மக்களே விழிப்புணர்வு அவசியம்:  பெருநகரங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
X
கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் அதிகபட்ச பாதிப்பு உறுதியானது.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4-ஆவது நாளாக உயர்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்.1-ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 1,509-ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை 1,592 என்ற நிலையை எட்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 229 பேருக்கும், சென்னையில் 165 பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும், ஈரோட்டில் 104 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,607 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 71,378-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,282 பேர் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!