மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை: உதயநிதி திறந்து வைத்தார்
மாற்றுத்திறனாளிகளும் சென்னை மெரினா கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகளை தமிழக அரசு முன்னேடுத்ததது.
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்ட இந்த நடைபாதை சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி, முதியோர்களும் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் செல்லலாம்.
மேலும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நேரு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்
டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு பாதையை பயன்படுத்த ஏதுவாக இந்த பாதை திறந்து வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu