TNCA இன் முன்னாள் தலைவரும் சன்மார் குழும தலைவருமான என்.சங்கர் மறைவு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 12,500 கோடி மதிப்பிலான சன்மார் குழுமத்தின் தலைவர் என் சங்கர் (76) சில நாட்கள் உடல் நலமின்றி இருந்தார். நேற்று அவர் காலமானார்.
இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இந்தியா சிமெண்ட்ஸ் என்னும் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய எஸ் என். சங்கரலிங்கம் ஐயரின் மகன் வழி பேரன் இவர். சங்கர் 1975 முதல் 2004 வரை சன்மார் குழுமத்தின் முதன்மையான செம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் குழுவில் இருந்தார் மற்றும் ஜூலை 1998 முதல் ஜூலை 2004 வரை நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அதற்கு முன், அவர் துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.
2004 முதல் ஆகஸ்ட் 2020 வரை, சன்மார் குழுமத்தின் ஆலோசனைக் குழுவான சன்மார் குரூப் கார்ப்பரேட் வாரியத்தின் தலைவராக இருந்தார். ஐந்து தசாப்தங்களாக நிறுவனத்தின் வெற்றிக்கு என் சங்கர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
TNCA இன் முன்னாள் தலைவரும், சன்மார் குழுமத்தின் தலைவருமான ஸ்ரீ என்.சங்கரின் மறைவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கயைில்...
அவர் ஒரு திறமையான நிர்வாகி மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்.அவரது மறைவு இந்திய கிரிக்கெட்டுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு நீண்ட காலமாக நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு TNCA ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது என கூறப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu