சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு
X

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் தொழில் முனைவோர்கள், வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுடன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் மெட்ரோஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களிலும் அதனை சார்ந்த காலி இடங்களிலும் தொழில் தொடங்க உள்ளவர்கள், வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைப்பதற்கும் தேவையான இட வசதி உள்ளதாகவும் அதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா தெரிவித்தார்.

மேலும் மெட்ரோ இரயில் நிறுவனம் வணிக மேம்பாடு அடைய பல்வேறு யுக்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலக கட்டிடம் அமைக்க தேவையான இட வசதி உள்ளது. இதற்கான இட வசதி நேரு பூங்கா, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, மத்திய சதுக்கம், மண்ணடி, விம்கோ நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு சொந்தமான இடங்களில் 3000 சதுர மீட்டர் முதல் 10,000 சதுர மீட்டர் வரை உள்ளது. இதுபோன்ற இடங்களில் அடுக்குமாடி வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள் அமைக்கலாம்.

மெட்ரோ இரயில் நிலைய பொதுத்தளங்களில் சிறு குறு மற்றும் நடுத்தர கடைகள் நடுத்துவதற்கான இட வசதிகள் உள்ளன.

இதுபோன்ற இட வசதி பெற விருப்பம் உள்ளவர்கள் மேலும் தகவல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தொடர்பு கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் விவரங்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் https://chennaimetrorail.org/wp-content/uploads/2023/05/List-of-Empanelled-Consultants.pdf இணையத்தள

முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு துறை முதன்மை பொது மேலாளர் ஆர். எம். கிருஷ்ணன், இணை பொது மேலாளர் ஆர். நரேந்திரகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி