அக்- 6 மற்றும் 9ம் தேதிகளில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2 கட்டமாக நடக்கிறது

அக்- 6 மற்றும்  9ம் தேதிகளில்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2 கட்டமாக நடக்கிறது
X

தேர்தல் ஆணையம் பைல் படம்

தமிழகத்தில் அக்டோபர் 6ம் மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு நடைபெறுகிறது என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான தேர்தலை செப்.15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.தேர்தல் நடத்துவது குறித்து சில தினங்களுக்கு முன்னர் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை செய்தது.

தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இன்று தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரி இன்று தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 6ம் தேதி முதல் கட்டமாகவும், அக்டோபர் 9ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனு தாக்கல் 15ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் கடைசிநாள் 22ம் தேதி, வேட்பு மனு பரிசீலனை 23ம் தேதி நடக்கிறது. , வேட்பு மனுவை வாபஸ் இறுதி நாள் 25ம் தேதி , தேர்தல் வாக்கு பதிவு அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது.

ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் அக்டோபர் 22ம் தேதி நடக்கிறது.

மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது. இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil