சென்னை ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு
X

ராஜ்பவன் அருகே ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனையடுத்து, ஆளுநர் மாளிகை முன்பு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஒப்படைத்தது.

இந்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் அதிகாரிகளுடன் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் ஆளுநர் மாளிகையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சில்வானிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil