சுவரொட்டிகளால் சென்னை மாநகரின் அழகு கெடுகிறது- மாநகராட்சி எச்சரிக்கை

சுவரொட்டிகளால் சென்னை மாநகரின் அழகு கெடுகிறது- மாநகராட்சி எச்சரிக்கை
X

சென்னை நகரில் உள்ள பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்கள், சுவரொட்டிகளால் மாநகரின் அழகை சீர்க்குலைக்கின்றன. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

தொடர்ந்து இதே நிலை தொடருமானால், சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், தங்கள் பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அது குறித்து மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை கார்ப்பரேசன் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Next Story