காவல்துறையிடம் வாக்குவாதம்: பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
️காவல்துறையிடம் வாக்குவாதம்: பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தின் போது காரில் வந்த பெண்ணிற்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதையறிந்த அப்பெண்ணின் தாயாரும் வழக்கறிஞருமான தனுஜா ராஜா சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தைவிடியோவாக பதிவு செய்தகாவல்துறையினர்அந்த வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல் உள்பட பலபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார் கூறியது, பெண் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் தந்தால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் எனக் கூறி பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu