மூத்த பத்திரிகையாளரின் மனைவி அளித்த புகார்- காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை
சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
மூத்த பத்திரிகையாளரின் மனைவி அளித்த புகார் மீது காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
மூத்த பத்திரிக்கையாளர் டி.கே .ரவீந்திரனுக்கு ( வயது 69) தன் வீட்டை லீசு க்கு தருவதாக சொல்லி பள்ளிக்கரணை, சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்த வி. சங்கர் என்பவர் ரூ 7.5 லட்சத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார்.கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த நூதன மோசடி நடைபெற்றது. பணம் கேட்டு சங்கர் வீட்டுக்கு பல மாதங்கள் அலைந்து பார்த்த பத்திரிகையாளர் ரவீந்திரன், பத்திரிகையாளர்கள் பாரதி தமிழன், அப்துல்லா,பக்கிரியப்பன் ஆகியோர் உதவியுடன் அப்போதைய மாநகர ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதனிடம் முறையிட்டார்.
அப்போதைய காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரூ 3 லட்சம் தொகையை சங்கரிடம் இருந்து வாங்கி கொடுத்தனர். மீதி ரூ 4.5 லட்சத்தை ஒரு மாதத்தில் தருவதாக சங்கர் உறுதி அளித்திருந்தார்.இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதை காரணமாக காட்டி மீதி தொகையை தராமல் இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் இரவீந்திரன் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.கடந்த 18 நாட்களுக்கும் மேலாக மயிலாப்பூர் புனித இசபெல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
ஐசியூவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கணவனை நினைத்து ஒருபுறம், மருத்துவமனைக்கு கட்டுவதற்கு பணத்துக்காக திண்டாடும் நிலை இன்னொரு புறமாக திருமதி. பிரேமா இரவீந்திரன் அலைபாய்ந்து கொண்டிருந்தார். இத்தகைய சூழலில், சங்கர் தரவேண்டிய பாக்கி ரூ 4.5 லட்சத்தை பெற்றுத் தரும்படி நேற்று முன்தினம் (08.06.21)சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் கண்ணீர் கடிதம் எழுதி அதனை புகாராக அளித்து முறையிட்டார்.
இதனையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் சங்கரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி நேற்றிரவு ஒரு லட்சம் தொகையை பிரேமா ரவீந்திரனிடம் சங்கர் ஒப்படைத்துள்ளார் .மீதி 3.5 லட்சம் தொகையை சில தினங்களில் தருவதாக உறுதியளித்தார்.
புகார் அளித்த ஒரே நாளில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல் ஆணையருக்கு மூத்த பத்திரிகையாளரின் மனைவி நன்றி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
புகார் அளித்த செய்திக்கான இணைப்பு..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu