திமுகவின் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

திமுகவின் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை
X

திமுகவின் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது பிறந்தநாளான இன்று காலை 11.30 மணி வாக்கில் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம்174படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் நதியா இன்று தனக்கு பிறந்தநாள் என்பதால் அதை விமர்சையாகக் கொண்டாடி முகநூலில் பதிவிட வேண்டும் எனக் கூறியதாகவும், அதற்கு கொரோனா காலம் என்பதால் அடுத்த ஆண்டு கொண்டாடலாம் என தமிழன் பிரசன்னா மறுத்ததால் மனமுடைந்து நதியா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரின் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் துறை தரப்பில் இவர்களுக்கிடையில் வேறு ஏதேனும் பிரச்சனை நடந்துள்ளதா? என்பது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
ai solutions for small business