பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் மீது காவல்துறை வழக்குப்பதிவு
X

மண்ணடி அஸ்கர்அலி

ஊரடங்கு வாகன தணிக்கையின் போது விதிகளை மீறி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்ததால் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

https://www.facebook.com/107274788081681/posts/163510932458066/?sfnsn=wiwspwa

பிராட்வே பாரதி கல்லூரி சிக்னல் அருகில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் முக கவசம் அணியவில்லை, இ-பதிவு இல்லாதால் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதனால் ஆட்டோ ஓட்டி வந்தவர் நடவடிக்கை எடுத்த பெண் உதவி ஆய்வாளருடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.


ஒரு கட்டத்தில், காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த அவர், தனக்கு அமைச்சரைத் தெரியும் எனவும், அவரை வரச் சொல்லவா எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் பேசினார்.காவல்துறையினர் முகக்கவசம் அணியச் சொல்லியும் அவர் அணியவில்லை. இதையடுத்து போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த ஆட்டோ ஓட்டுனர் மண்ணடியைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

https://www.facebook.com/107274788081681/posts/163510932458066/?sfnsn=wiwspwa

மேலும் முதியோருக்கான இ- பதிவை எடுத்து வைத்து கொண்டு பயணிகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story
ai solutions for small business