சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் தேசிய பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் தேசிய பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்
X

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இணைய வழியில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தலின் தேவையை குறித்து பேசினார். மேலும், அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கான உரிமைகள், பலன்களை பெறுவதில் பங்கு, சமத்துவம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். பெண் குழந்தைகள் தங்களது பலம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றும், தங்களது இலக்கை அடைய உழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.


தொடர்ந்து பேசிய அப்பள்ளியின் முதல்வர் மாணிக்கசாமி, பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை பற்றி பேசினார். ஆதரவற்ற, உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஆதரவு குரல் எழுப்புவது அனைவரது பொறுப்பு எனவும் அவர் பேசினார்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!