"உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்" -கமலஹாசன் வெளியிட்ட வீடியோ பதிவு!

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் -கமலஹாசன் வெளியிட்ட வீடியோ பதிவு!
X

கமல் ஹாசன்

என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை தழுவியது. இதனால் கட்சியின் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.

இதுதொடர்பாக கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றி பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே.

நாம் ஒரு சிறு விதைதான். இது மண்ணைப் பற்றிக் கொண்டால் அது காடாக மாறும். கட்சியின் உட்கட்டமைப்பு தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி விளையாடியது இனி நடக்காது.

பொய் குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள். சென்றவர்கள் திரும்பி வந்தால் அவர்களை சேர்த்து கட்சியை மீண்டும் மாசுபடுத்த விடமாட்டோம்.

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நிதி மய்யம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது