திமுக தொண்டரை தாக்கிய வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

திமுக தொண்டரை தாக்கிய வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின்பேரில் திமுகவை சேர்ந்த 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அவரை சென்னை எழும்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார் கைது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதாவதற்கு சில நிமிடங்கள் முன்பு தான், கள்ள ஓட்டு போட்ட திமுககாரங்களை பிடித்து கொடுத்ததற்கு என்மீதே வழக்கா? திமுககாரர்கள் கள்ள ஓட்டு போட்டதை பார்த்த, வாக்குச்சாவடி மைய அலுவலரின் வாக்குமூலமே இதற்கு சாட்சியாக இருக்கு. இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முதல்வர் அவர்களே! என்று ஜெயக்குமார் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!