வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்: சத்ய பிரதா சாகு தகவல்

வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்: சத்ய பிரதா சாகு தகவல்
X

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு 

தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று என்பதால் கூடுதல் அதிகாரிகள் நியமனமிக்கப்படுவார்கள் என சத்ய பிரத சாகு தகவல்

தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதால் கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் இருப்பார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்தில் யாருக்கேனும் காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கையில் 16 ஆயிரத்து 387 அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags

Next Story