சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்
X
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சென்னையில் நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்திலையில் சென்னையில் பொதுமக்கள் மாநகர பேருந்துகளில் சிரமமின்றி பயணிக்க வசதியாக நாளை 10.04.2021 முதல் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் காலை மற்றும் மாலையில் கூட்ட நெரிசல் நேரங்களில் இயக்கப்படும் எனவும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!