சென்னையில் உள்ள நெசவாளர்கள் சேவை மையத்தை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டார்

இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வளர்ச்சி ஆணையரகத்தின் (கைத்தறி) ஒரு அங்கமான சென்னையிலுள்ள நெசவாளர்கள் சேவை மையத்தை நேற்று மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் பார்வையிட்டார்.
நெசவாளர் சேவை மையத்தின் வடிவமைப்புப் பிரிவு, நெசவுப் பிரிவு மற்றும் சாயமிடுதல் & அச்சிடுதல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகளை அவர் பார்வையிட்டார். மேலும், பல்வேறு குழுக்கள் மற்றும் சமரத் திட்டத்தின் கிழ் நடத்தப்பட்ட திறன் மேம்பாடு பயிற்சித் திட்டங்களின் மூலம் பயிற்சி பெற்றவர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகளையும் அவர் ஆய்வு செய்தார். நெசவாளர் சேவை மையங்களால் உருவாக்கப்பட்ட மாதிரிகளையும் அவர் பார்வையிட்டார்.
ஹத்கர்கா சம்வர்தன் சஹாயதா, திறன் மேம்படுத்தல் பயிற்சி திட்டங்கள், பணிமனை, லைட்டிங் பிரிவுகள், நூல் வழங்கும் திட்டம், முத்ரா திட்டம் போன்றவற்றின் நெசவாளர் பயனாளிகளுடன் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் உரையாடினார். மண்டல இயக்குநர் (தெற்கு & மேற்கு) முத்துசாமி மற்றும் சென்னை, சேலம் மற்றும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையங்களின் அலுவலர்கள் உடனிருந்தனர். சென்னையில் உள்ள நெசவாளர்கள் சேவை மையத்தின் குறுகிய காலப் பயிற்சியாளர்களுடன் அவர்களின் பயிற்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் உரையாடியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu