தற்போது பேருந்து கட்டணம் உயராது - போக்குவரத்துத்துறை அமைச்சர்

தற்போது பேருந்து கட்டணம் உயராது - போக்குவரத்துத்துறை அமைச்சர்
X
டீசல் விலையேற்றம் காரணமாக, மற்ற மாநிலங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர் விளக்கம்.

தமிழ்நாட்டில் தற்போது பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்றார்.


இந்த சூழலில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார் . சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் இரண்டாயிரம் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் இதன் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் எலக்ட்ரிக் பைக் உங்களால் ஏற்படும் விபத்துக்கள் அதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை அளிக்க போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்துடன் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவரவும் அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு , தற்போது கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்று கூறினார். மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சிவசங்கரின் விளக்கம் சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

Next Story