முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ 31 லட்சம், பள்ளிக் கல்வி அமைச்சர் வழங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ 31 லட்சம், பள்ளிக் கல்வி அமைச்சர் வழங்கல்
X
தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொரோனா நிவாரண பணிக்காக தன்னிடம் வழங்கிய ரூ 31 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார்,

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னிடம் வழங்கப்பட்ட ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ரூ.15 லட்சம்,

புதுக்கோட்டை நிஜாம் பாக்கு நிறுவனத்தின் சார்பில் ரூ.15 லட்சம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பொறியாளர்கள் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் என மொத்தம் 31 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!