சென்னையில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பை திறந்து வைத்தார் நிர்மலா சீதாராமன்

சென்னையில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பை திறந்து வைத்தார் நிர்மலா சீதாராமன்
X

சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி.சி. பட்வாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!