சென்னை விமான நிலையத்திற்கு மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம்

சென்னை விமான நிலையத்திற்கு மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம்
X

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம்.

சென்னை மெட்ரோ இரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்திற்கு இடையேயான இன்டர்காரிடர் ரயில்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பக் கோளாறை தொழில்நுட்பக் குழு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தை அடைவதற்கு பயணிகள் ஆலந்தூரில் இறங்கி ரயில்களை மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தடங்களுக்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ இரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு வழியாக புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ இரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மட்டுமே செல்லும். ஆகையால் பச்சை வழித்தடத்தில் விமான நிலையம் செல்லும் மெட்ரோ இரயில் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் நீல வழித்தடத்தில் மாறி விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

இதேபோல், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் பச்சை வழித்தடத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் எழும்பூர் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிற்கு செல்ல வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்களை தவிர இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை தீவிரமாக சரிபார்த்து கொண்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ இரயிகள் வழக்கம் போல் இயக்கப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு வருந்துகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!