தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் 19ம் தேதிக்கு மாற்றம் : அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் 19ம் தேதிக்கு மாற்றம் : அமைச்சர் தகவல்
X

பைல் படம்

தமிழகத்தில் 17ம் தேதி நடக்க இருந்த மெகா தடுப்பூசி முகாம் 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழக அரசு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பசி முகாமை கடந்த 12ம் தேதி நடத்தியது. இதில் 40 ஆயிரம் மையங்களில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டது.

ஆனால் 28.36 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து 17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‛நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை அறியும் முயற்சியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் இன்னும் வராததால், தமிழகம் முழுவதும் 17ம் தேதி நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 19ம் தேிக்கு மாற்றப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story