மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலைய பார்க்கிங் மூடல்

மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலைய பார்க்கிங் மூடல்
X

பைல் படம்.

மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்போது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்திற்கு அருகாமையில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் 4656 சதுர மீட்டர் பரப்பளவில் இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு வாகன நிறுத்தும் இடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் வசதி கடந்த 19ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். மெட்ரோ இரயில் பயணிகள் இந்த வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி புதுப்பிக்கும் பணிக்களுக்காக மார்ச் 24, 2023 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது. இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில், மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்கள் தற்காலிகமாக வாகன நிறுத்த இயலாததற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil