மாஸ் கிளினிங்கால் சென்னை தெருங்கள் பளிச்: மாநகராட்சி சுறுசுறுப்பு

மாஸ் கிளினிங்கால் சென்னை தெருங்கள் பளிச்: மாநகராட்சி சுறுசுறுப்பு
X

சென்னை மாநகராட்சி 13,வது மண்டலம் சித்ரா நகரில் தூய்மைப்பணி நடைபெற்றது. 

சென்னையில் நடைபெற்று வரும் மாஸ் கிளினிங் பணிகளால், குப்பைகள் அகற்றப்பட்டு தெருங்கள் பளிச்சிட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகாரிகளின் தலைமையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

சென்னை மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, பசுமையாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் மாற்றும் வகையில், மாஸ் கிளினிங் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அவ்வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அதிகாரிகளின் தலைமையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

11,வது மண்டலம் சரஸ்வதி நகரில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது.

மேலும் சாலைகள், தெருக்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் பணி நடைபெறுகிறது. பகல் நேரங்களில் மட்டும் குப்பை கழிவுகளை அகற்றுவதோடு மட்டுமின்றி இரவு நேரங்களிலும் இந்த பணி நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியின், மாஸ் கிளினிங் பணியால், மலைபோல் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்த பல தெருக்கள், தற்போது பளிச்சென்று உள்ளன. இனி தூய்மையாக வைத்திருப்பதில் பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!