தமிழகத்தில் மரைன் ஊர்க்காவல் படை; 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழகத்தில் மரைன் ஊர்க்காவல் படை; 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
X
ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர்

மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்ற 1000 மரைன் ஊர்காவல் படை இளைஞர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் போலீசாருக்கு உதவ உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஊர்காவல் படை என்ற அமைப்பு செயல் படுவது போல் கடலோர கண்காணிப்பு பணிக்காக மரைன் ஹோம் கார்டு பணிக்கு 1000 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர். என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ராமநாதபுரம், தூத்துக்குடி , திருநெல்வேலி , கன்யாகுமரி , தஞ்சை , நாகை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 42 மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் இதற்காக இளைஞர்கள் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தபட்ட ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். 18 முதல் 30 வயதிற்குட்பட்ட வழக்கு எதுவும் இல்லாதவராக இருக்க வேண்டும். ஒரு ஸ்டேஷனுக்கு 25 பேருக்கும் மேல் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே உள்ள ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்கப்படும். தகுதியான மீனவ இளைஞர்கள் கடல் மீன் பிடி தொழிலுக்கு சென்றாலும் இந்த பணியில் விரும்பி சேரலாம். தற்போது இப்படைக்கான தேர்வு பணி நடப்பதால் இளைஞர்கள் அவர்கள் பகுதியில் உள்ள மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

காலிப்பணி இடங்கள -1000 காலிப்பணி இடங்கள்

பணியிடம - தமிழகம்

தேர்ந்தெடுக்கும் முறை - உடற் தகுதி தேர்வு, நேர்முக தேர்வு

வயது -18 ல் இருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி- 21.09.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி- விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் SC/ST - No fees, Others - 560/-

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!