சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணி மண்டபம்: முதலமைச்சர் அறிவிப்பு

சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணி மண்டபம்: முதலமைச்சர் அறிவிப்பு
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ( பைல் படம்)

விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்ட பேரவையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் ரூ 4 கோடியில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதே திராவிட கொள்கை என்றும் போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தகுதிகேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!