மதுரவாயல் அருகே டயர் வெடித்து கோயிலுக்குள் புகுந்த கார்: ஒருவர் படுகாயம்

மதுரவாயல் அருகே டயர் வெடித்து கோயிலுக்குள் புகுந்த கார்: ஒருவர் படுகாயம்

டயர் வெடித்ததால் கோயிலுக்குள் புகுந்த கார்.

மதுரவாயல் அருகே டயர் வெடித்ததில் நிலைதடுமாறி, சாலையோர கோயிலுக்குள் கார் புகுந்தால் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருவள்ளூரை சேர்ந்தவர் பாலசந்தர் நேற்று கரையான்சாவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி டிரங்க் சாலையில் கார் சென்றபோது, அதன் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்றிருந்த பைக்கை இடித்து தள்ளியபடி அங்குள்ள சாலையோர கோயிலுக்குள் கார் மோதி நின்றது.

கோயிலுக்குள் துாக்கி கொண்டியிருந்த ராஜேஷ் என்பவர் மீது கார் ஏறியது. காரை ஓட்டிவந்த டிரைவர் பாலகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவத்தின் போது குடியிருப்புகள் கட்ட வாடகைக்கு விடப்படும் ஏணி வைத்துள்ள கடை, மற்றொரு பைக் மற்றும் சாலையோர கோயில் முற்றிலும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் விபத்துக்கு உள்ளான காரை உடனடியாக அகற்றினர்.

இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story