சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ‘முன்னணி நடைமுறைகள்’ விருது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மனிதவளத் துறை, பீப்பிள் ஃபர்ஸ்ட் அமைப்பு (PeopleFirst Organisation) நடத்திய மனித வள மன்றத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்றுக்கொண்ட மனித வள உத்தியில் "முன்னணி நடைமுறைகள்" ("Leading Practices") என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சமர்ப்பித்துள்ளது. இந்த கட்டுரையின் விளக்கக்காட்சியின் அடிப்படையில், நடுவர்குழு உறுப்பினர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான தாக்கம் நிறைந்த மனிதவள வியூகத்தின் "முன்னணி நடைமுறைகள்" என்ற பிரிவின் வெற்றியாளருக்கான விருதினை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.
பீப்பிள் ஃபர்ஸ்ட் மனித வள சிறப்பு விருதுகள் மனித வளத் துறையில் மிகவும் விரும்பப்படும் மற்றும் நீண்டகாலமாக இயங்கும் விருதுகள் ஆகும். மக்கள் மூலோபாயத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும் தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
உற்பத்தி, ஆட்டோமொபைல், தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், வங்கி, நிதிச் சேவைகள், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு துறைகளில் 90+ நிறுவனங்களிடமிருந்து 200+ உள்ளீடுகள் ஒட்டுமொத்த வகைகளுக்கான இந்த ஆண்டு பரிந்துரைகளில் அடங்கும்.
2023 ஆம் ஆண்டிற்கான பீப்பிள் ஃபர்ஸ்ட் மனித வள சிறப்பு விருதுகள் பிரிவில் சிறந்த விருது வென்றவர்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒன்றாகும். நடுவர்குழு உறுப்பினர்கள் பரிந்துரை கதை மற்றும் விளக்கக்காட்சி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டனர். இதன் அடிப்படையில் நடுவர் கருத்து மற்றும் சென்னை மெட்ரோ இரயிலின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கான சான்றாக இவ்விருது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu