பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது
காட்சி படம்
சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியில் இருந்து பிராட்வே வரை செல்லும் 64 கே என்ற அரசு பேருந்து நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கண்ணதாசன் நகர் பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்தபோது, பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 20 பேர் அந்தப் பேருந்தை மறித்து அதன் மீது ஏறி பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடத்துனர் வேலு, பேருந்திலிருந்து இறங்கி மாணவர்களிடம் இதுபற்றி கேட்டபோது மாணவர்கள் கேக்கை எடுத்து நடத்துனரின் முகத்தில் பூசி தகராறில் ஈடுபட்டனர். இதனால் நடத்துனர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற செம்பியம் காவல் ஆய்வாளர் ஐயப்பன், இதுகுறித்து நடத்துனரிடம் புகாரை பெற்று ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வந்தார்.
இந்நிலையில் கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் வயது 19 என்ற மாணவரை செம்பியம் போலீசார் கைது செய்தனர் இவர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார் மேலும் இவருடன் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய மாணவன் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் நடத்துனரை தாக்கி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிய காவல்துறையினர், விஜய் என்பவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu