பெரவள்ளூரில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் கைது

பெரவள்ளூரில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் கைது
X

பெரவள்ளூரில் பொதுமக்களை அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்ட தினேஷ் மற்றும் மணிகண்டன் 

பெரவள்ளூரில் மளிகைக்கடையில் தகராறு செய்து பொதுமக்களை அச்சுறுத்திய 2 ரவுடிகள் கைது.

சென்னை பெரவள்ளூர். ஜி கே எம் காலனி 27வது தெரு பகுதியில் மளிகைக் கடை வைத்திருப்பவர் ராஜசேகர் 45 நேற்றிரவு இவரது கடைக்கு வந்த 2 பேர் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். அதன்பின்பு சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். அதற்கு மளிகை கடைக்காரர் பணம் கேட்கவே, அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்து உள்ளனர். அதன் பிறகு அருகில் இருந்த காலி இடத்துக்கு சென்று மது அருந்திவிட்டு மீண்டும் கடைக்கு வந்து கடையில் இருந்த பாட்டில்களை அடித்து உடைத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் சென்ற பொது மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதுகுறித்த தகவலை பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பெரவள்ளூர் போலீசார் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அரக்கோணம் திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்கின்ற அக்யூஸ்ட் தினேஷ் வயது ௨௬, மற்றொரு நபர் சென்னை கதிர்வேடு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கின்ற மாவா மணி 32 என்பது தெரியவந்தது

இதில் தினேஷ்குமார் மீது ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேர் மீதும் பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!