கொளத்தூரில் குட்கா விற்பனை செய்த மற்றும் உரிமம் இல்லாத கடைகளுக்கு சீல்

கொளத்தூரில் குட்கா விற்பனை செய்த மற்றும் உரிமம் இல்லாத கடைகளுக்கு சீல்
X

உரிமம் பெறாத கடைகளை மூடி சென்னை மாநகராட்சி சீல் வைத்தது.

கொளத்தூரில் உரிமம் இல்லாத கடைகள் மற்றும் குட்கா விற்பனை செய்த ஐந்து கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னையில் உரிமம் இல்லாத கடைகள் மற்றும் குட்கா விற்பனை செய்யும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து அக்கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் திருவிக நகர் 6வது மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர் பகுதியில் உரிமம் இல்லாமல் சில கடைகள் செயல்பட்டு வருவதாகவும் மேலும் சில கடைகளில் குட்கா விற்பனை நடைபெற்று வருவதாகவும் திருவிக நகர் மண்டல அதிகாரி விஜூலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது

அதன்பேரில் திருவிக நகர் மண்டல உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார் தலைமையில் உரிமம் ஆய்வாளர் ராணி வின்சென்ட் , உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் வரி வசூலிப்பவர்கள் இன்று காலை கொளத்தூர் ஜம்புலிங்கம் மெயின் ரோடு பகுதியில் குட்கா விற்பனை செய்த டீக்கடை மற்றும் பாலசுப்பிரமணியம் தெரு பகுதியில் ஒரு மளிகைக்கட உள்ளிட்ட இரண்டு கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதேபோன்று கார்த்திகேயன் சாலை பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த டைலர் கடை மற்றும் ஜெராக்ஸ் கடை ஆகிய கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பூம்புகார் நகர் பகுதியில் பழைய இரும்புக்கடை ஒன்று உரிமம் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.

அந்தக் கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். டீக்கடை மற்றும் பெட்டிக் கடைகளில் குட்கா விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மேலும் உரிமம் இல்லாத கடைகள் தங்களது உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!