கொளத்தூரில் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொளத்தூரில் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

கொளத்தூர் கே.சி.கார்டன் பகுதியில் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொளத்தூர் கே.சி.கார்டன் பகுதியில் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில மழை நீர் தேங்கியது. சில இடங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடியது.

இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது கழிவுநீரில் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. பல இடங்களிலும் தொடர்ந்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், சில இடங்களில் இன்னும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் ஆங்காங்கே அவ்வப்போது சாலை மறியல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை 5 மணி அளவில் கொளத்தூர் கேசி கார்டன் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்றக் கோரி, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ராம் நகர் 4வது தெரு சந்திப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு மற்றும் திருவிக நகர் போலீசார், பொதுமக்களிடம் உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story