/* */

பெரம்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

பெரம்பூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெரம்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
X

தமிழ் நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பெரம்பூரில் சாலை மறியல் நடைபெற்றது

திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை மூன்றாயிரம் ரூபாயாகவும், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில்‌ தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியல் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக, சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பிருந்தா திரையரங்கம் எதிரில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து, மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் அடைத்தனர்.

Updated On: 14 Dec 2021 10:59 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  4. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  6. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  7. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  9. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...