கலைஞரை விட பத்து மடங்கு புகழை மு.க ஸ்டாலின் பெறுவார்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

கலைஞரை விட பத்து மடங்கு புகழை மு.க ஸ்டாலின் பெறுவார்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
X

கொளத்தூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்

ஸ்டாலின் ஆட்சி காலத்தில்தான் தமிழ் வளரப் போகிறது. திராவிடம் நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றார் அமைச்சர் துரைமுருகன்

கலைஞர் கருணாநிதி அடைந்த புகழை விட ஸ்டாலின் 10 மடங்கு அதிக புகழை அடைவார் என்றார் அமைச்சர் துரைமுருகன்.

சென்னை கொளத்தூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மனிதநேயம் திருநாள் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுகவின் பொது செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது: இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் செய்யக்கூடிய வித்தை தெரிந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கலைஞர் என்ன செய்வாரோ அதைதான் தற்போது முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் ஆட்சி காலத்தில்தான் தமிழ் வளரப் போகிறது. இனி திராவிடம் நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.சட்டசபையில் கலைஞருக்குப் பிறகு 53 ஆண்டுகள் சட்டசபையில் அமர்ந்தவன் நான். கலைஞர் பெற்ற புகழை விட பத்து மடங்கு அதிகமான புகழை பெறுவார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவருடைய காலத்தில்தான் தொழில்துறை வளரப் போகிறது தமிழகம் மறுமலர்ச்சி அடைய போகிறது. திராவிடம் என்னும் பெயர் 1000 ஆண்டுகள் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும். திராவிடத் தந்தையாகவும் திராவிட பேரியக்க தலைவராகவும் மு க ஸ்டாலின் திகழ்வார் என்றார் அமைச்சர் துரைமுருகன்.

இதில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி கே சேகர்பாபு., வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தின் வளர்ச்சி குறித்தும் முதல்வர் செய்து வரும் திட்டங்கள் குறித்து பேசினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்