கொளத்தூரில் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்

கொளத்தூரில் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்
X

கொளத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய அமைச்சர் சேகர் பாபு

கொளத்தூர் தொகுதிக்கு கட்சி நிர்வாகிகளுக்கு திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு 300 நபர்களுக்கு புத்தாடை அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளி. வழக்கறிஞர் சந்துரு. தனசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story