பொய் வழக்கு: கொளத்தூர் தொகுதி 64 -ஆவது அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

பொய் வழக்கு: கொளத்தூர் தொகுதி 64 -ஆவது அதிமுக வேட்பாளர்  குற்றச்சாட்டு
X

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட 64 வது வார்டில்  போட்டியிடும் அதிமுக  வேட்பாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

எனது ஆதரவாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். அடுத்து என்னை டார்கெட் செய்து வருகின்றனர். எந்த வகையிலும் நான் பின்வாங்க மாட்டேன்

என் மீது பொய் வழக்குகள் போட்டு என்னுடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் என்று முதல்வர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட 64 வது வார்டில் அதிமுக சார்பில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார் நேற்றுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டில் அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற நாள் முதல் தற்போது வரை தொடர்ந்து என் மீது காவல் நிலையங்களில் பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் என்னை கைது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் போலீசார் இவ்வாறு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எனது ஆதரவாளர்கள் முகவர்கள் என ஒவ்வொருவராக கைது செய்து வருகின்றனர்.

இன்று காலை கூட எனது ஆதரவாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். அடுத்து என்னை டார்கெட் செய்து வருகின்றனர். எந்த வகையிலும் நான் பின்வாங்க மாட்டேன். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை அமைச்சர் சேகர் பகுதியில் அமைத்துள்ளார்கள். இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளேன் என தெரிவித்தார்.

.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!