கொளத்தூரில் ஸ்டவ் வெடித்து கல்லூரி மாணவி பலி

கொளத்தூரில் ஸ்டவ் வெடித்து கல்லூரி மாணவி பலி
X
சென்னை அருகே, கொளத்தூரில் ஸ்டவ் வெடித்து கல்லூரி மாணவி பலியானார்.

சென்னை கொளத்தூர் யமுனா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவர், டீக்கடையில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி, அதே பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சந்தியா வயது 19 என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். சந்தியா குயின் மேரிஸ் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பி ஏ படித்து வந்தார்.

நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்து, சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை தீக்குச்சியால் பற்ற வைப்பதற்கு முன்பு, நன்றாக அழுத்தம் கொடுத்துவிட்டு தீக்குச்சியை கொளுத்தி பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் பலத்த சத்தத்துடன் வெடித்து சந்தியா உடல் முழுவதும் தீ பரவியது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டில் இருந்த சில பொருட்களுக்கும் தீ பரவியது.

சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு 93 சதவீத தீக்காயங்களுடன் சந்தியா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு எட்டு மணி அளவில் உயிரிழந்தார். கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!