சென்னை கொளத்தூர் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கொளத்தூர் பகுதியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 1500 நபர்களுக்கு 3000 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் ஊக்கதொகையாக 1000 ரூபாய் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்: இன்று நடைபெறும் நிகழ்ச்சி எனக்கான பாராட்டு விழா போல தோன்றுகிறது இந்த பாராட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தால்தான் என் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி என ஏற்றுக்கொள்வேன். அதிக நேரம் பேசுவதை விட செயலில் நிரூபிக்க வேண்டும் என்ற உணர்வை பெற்றவன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை ஒரு மதத்திற்கு இல்லாமல் அனைத்து மதத்தினர் விழாவும் கொண்டாடுகிறோம், அனைத்து மதங்களும் ஒன்றைத்தான் அடிப்படையில் போதிக்கிறது,தியாகம்,அன்பு,ஒற்றுமை இவைகள்தான் மதத்தின் வெளிப்பாடு அதன் அடிப்படையில் அன்பை வெளிக்காட்டும் விதமாகத்தான் நீங்கள் கேட்பதற்கு முன்பாக இந்த அன்பு பரிசை வழங்குகிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கொளத்தூர் தொகுதியை கடந்து தமிழகம் முழுவதும் மக்கள் புன்னகையோடு வரவேற்கின்றனர்,சாமானிய மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து தீட்டி வருகிறோம் தேர்தல் நேரத்தில் வழங்கிய 500 வாக்குறுதியில் 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் தொடர்ந்து தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை கடந்து புதிய திட்டங்களையும் செயல்படுத்தவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் எனக்கு வழங்கியுள்ள பதவிகளை பொறுப்பாக நினைத்து தொடர்ந்து செயல்படுவேன் என தெரிவித்தார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu