பேருந்தின் கண்ணாடி உடைப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலை

மர்ம நபரால் அடித்து உடைக்கப்பட்ட பஸ் கண்ணாடி
சென்னை சைதாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் வயது 56 இவர் எண்ணூர் பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்
தினமும் எண்ணூரில் இருந்து கோயம்பேடு வரை செல்லும் தடம் எண் 121 சி என்ற பேருந்தை ஓட்டி வந்தார். இன்று மதியம் எண்ணூரில் இருந்து கோயம்பேடு செல்லும்போது செந்தில் நகர் சிக்னல் அருகே இரண்டு பெண்கள் பேருந்தை கை நீட்டி நிறுத்த சொன்னதாகவும் ஆனால் அங்கு பேருந்து நிறுத்தம் இல்லாததால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் வந்துவிட்டு அதற்கு அடுத்த பேருந்து நிறுத்தமான தாதாகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி உள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் ஓட்டுநரிடம் வந்து ஏன் பெண்கள் பேருந்தை நிறுத்த சொல்லி நிறுத்தாமல் வந்தீர்கள் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார் அதன் பிறகு கீழே இருந்த கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்
இதில் பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் மணிவண்ணன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் பேருந்தை கல்லைக் கொண்டு எரிந்து சேதப்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu