பயணியின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் : குவியுது பாராட்டு
மனிதாபிமானத்தோடு பயணியின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் நடத்துனர், ஓட்டுனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 45 ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் வயது 31 இவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் பெரம்பூர் பகுதியில் இருந்து புத்தகரம் செல்லும் தடம் எண் 142 பி என்ற பேருந்தை இன்று காலை பெரம்பூரில் இருந்து எடுத்து புத்தகரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு வீனஸ் பகுதி அருகே 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பேருந்தில் ஏறி விநாயகபுரம் செல்லவேண்டும் என்று கூறி டிக்கெட் எடுத்துள்ளார்
பேருந்து கொளத்தூர் 70 அடி சாலை அருகே சென்றபோது திடீரென்று அந்த இளைஞர் வலிப்பு நோய் ஏற்பட்டு பேருந்திலேயே மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார் உடனடியாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செய்வதறியாது தவித்தனர்.
உடனே பேருந்து ஓட்டுனர் ராமலிங்கம் பேருந்தை கொளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார்
அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் எதுவும் கூறாமல் அமைதி காத்தனர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பேருந்தை நிறுத்தி அந்த இளைஞரை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பொதுமக்கள் சேர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்று சேர்த்தனர்
அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி கொடுத்து உள்நோயாளியாக அனுமதித்தனர் அதன் பிறகு வெளியே வந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்த பயணிகளை அவ்வழியாக வந்த மற்றொரு பேருந்தில் மாற்றி அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டதில் பஸ்ஸில் வலிப்புநோய் ஏற்பட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் வயது 28 என்பதும். இவர் திருவிக நகரில் உள்ள அவரது மாமா ராஜா என்பவரது வீட்டில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உறவினர்களை வரவழைத்த போலீசார் தொடர்ந்து தங்கராஜ்க்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். பேருந்தில் இருந்த பயணிகளும் இளைஞரின் உயிரை தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று காப்பாற்றிய நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu