17 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்: அதிர்ச்சியில் தந்தை தற்கொலை

17 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்: அதிர்ச்சியில் தந்தை தற்கொலை
X

ஐயப்பன். 

சென்னையில் 17 வயது சிறுமி காதலனுடன் ஓட்டமிட்டதால், அதிர்ச்சியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை, ராஜமங்கலம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 47. இவருக்கு திருமணமாகி சீதா வயது 40. என்ற மனைவியும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. ஐயப்பன் மற்றும் அவரது மனைவி சீதா ஆகிய இருவரும் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி கொளத்தூர் கண்ணகி நகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த குமார் வயது 26 என்பவருடன் காதல் வயப்பட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் மாற்றினர்.

அவர்கள் வழக்குப்பதிவு செய்து சிறுமி மற்றும் அவரது காதலன் இருவரையும் தேடி வந்த நிலையில், சிறுமியின் தந்தை ஐயப்பன் நேற்றிரவு 11 மணியளவில் அவரது வீட்டில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது தனது கணவன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து ராஜமங்கலம் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற ராஜமங்கலம் போலீசார் ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!